News November 16, 2024

3 முறை 200+ ரன்கள் குவித்த இந்திய அணி

image

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 202 ரன்கள் குவித்த IND அணி, 61 ரன்கள் வித்தியாசத்திலும், 3வது போட்டியில் 219 ரன்கள் குவித்து 11 ரன்கள் வித்தியாசத்திலும், கடைசி போட்டியில் 283 ரன்கள் குவித்து 135 ரன்கள் வித்தியாசத்திலும் IND அணி வென்றது. 2வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் SA வென்றது.

Similar News

News August 27, 2025

பிக்பாஸ் பிரபலத்தால் பரிகார பூஜையில் குருவாயூர் கோயில்

image

பிக்பாஸ் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர், குருவாயூர் கோயில் குளத்தில் கால் நனைத்ததை இன்ஸ்டாவில் வெளியிட்டார். இந்து மதம் அல்லாத பிற மதத்தவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்ற நிலையில், ஜாஸ்மினின் செயலால் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், நேற்று மதியம் முதல் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வீடியோவை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார் ஜாஸ்மின்.

News August 27, 2025

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மல்லி தேநீர்!

image

கொத்தமல்லி விதை & தழைகளில் உள்ள பைட்டோஸ்டெரால் ரசாயனம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கொத்தமல்லி விதை & தழை, சுக்கு, மிளகு, மஞ்சள், நட்சத்திரப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால், மணமிக்க சுவையான மல்லி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.

News August 27, 2025

OTP பெறாமல் ஆன்லைன் சேவைகளே கிடையாது: HC

image

மத்திய, மாநில & தனியார் நிறுவனங்கள் பல்வேறு சேவைகளுக்காக OTP பெறுவது தனியுரிமை விதிகளுக்கு முரணானது என கூறி, OTP-க்கு தடை விதிக்க மதுரை HC-ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், இன்றைய காலகட்டத்தில் OTP பெறாமல் எந்த ஒரு ஆன்லைன் சேவையும் நடைபெறாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற DMK முன்னெடுப்பில் OTP பெறுவதற்கு HC தடை விதித்தது.

error: Content is protected !!