News November 16, 2024

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை

image

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, வேளச்சேரி, தரமணி, கிண்டி, தி.நகர், நந்தனம், அடையாறு, திருவான்மியூர், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம், வடபழனி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து 5ஆவது நாளாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. உங்க பகுதியில் மழையா? எந்த இடம்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News March 15, 2026

மகளிர் வங்கி கணக்கில் ₹5,000.. ECI அதிரடி

image

TN அரசு மகளிருக்கு ₹5,000 கொடுத்தது தவறில்லை என CEC ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் தேதி அறிவிப்பின்போது, தமிழகத்தில் மகளிர் வங்கி கணக்கில் அரசு ₹5,000 டெபாசிட் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்கலாம் என அவர் விளக்கம் அளித்தார். அசாமிலும் மகளிருக்கு அம்மாநில அரசு ₹9,000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2026

அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

image

வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச் செல்ல வாக்காளர்களுக்கு அனுமதி கிடையாது என ECI அறிவித்துள்ளது. இதற்காக வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போன் டெபாசிட் மையம் அமைக்கப்படும். அங்கு செல்போனை ஒப்படைத்த பிறகே வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்களித்த பிறகு செல்போனை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

News March 15, 2026

2021 தேர்தல் களம் எப்படி இருந்தது? REWIND

image

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது வரை நான்குமுனை போட்டியாக உள்ள தேர்தல் களத்தில் யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்று மே 4-ம் தேதி தெரிந்துவிடும். இந்நிலையில், 2021 தேர்தல் களம் எப்படி இருந்தது, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த சீட்கள், வாக்கு சதவீதம், வாக்காளர்கள் எண்ணிக்கை போன்றவற்றை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். SHARE

error: Content is protected !!