News November 16, 2024

டி20 அதிரடி சதம்: 3ஆவது இடத்தில் திலக் வர்மா

image

டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை திலக் வர்மா பிடித்துள்ளார். 35 பந்துகளில் சதமடித்து ரோஹித் சர்மா அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து, 40 பந்துகளில் சதம் விளாசி 2ஆவது இடத்தில் சஞ்சு சாம்சன் உள்ளார். இன்றைய தென்.ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் 41 பந்துகளில் சதம் அடித்து 3ஆவது இடத்தை திலக் வர்மா பிடித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரிப்பு: ரவிக்குமார் MP

image

சாதி ரீதியான மோதல்களை தடுப்பதில் காவல்துறை மெத்தனமாக இருக்கக் கூடாது என ரவிக்குமார் MP தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்கு பாஜக போன்ற மதவாத சக்திகள் வலுப்பெற்றதே காரணம் என குற்றஞ்சாட்டினார். மேலும், சாதிய வன்கொடுமைகளை தடுக்க நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை முழுமையாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

News March 4, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 627 ▶குறள்:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
▶பொருள்: துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

News March 4, 2026

CINEMA 360°: ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு சூர்யா ரெடி

image

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீஸர் மார்ச் 5-ல் ரிலீசாகிறது *’வித் லவ் படம்’ மார்ச் 6 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும் என அறிவிப்பு *மறைந்த இயக்குநர் சங்கையாவின் மகளின் கல்வி நிதிக்கு யோகி பாபு ₹1 லட்சம் வழங்கியுள்ளார் *அஜித்குமாரின் அண்ணன் அணில் குமார் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் *வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திற்கு மாதம் 10 நாள்கள் கால்ஷீட் தர சூர்யா ஒப்புக்கொண்டதாக தகவல்

error: Content is protected !!