News November 16, 2024
நாதக கூட்டத்தில் பங்கேற்ற தாசில்தார் மீது ஆக்ஷன்

நெல்லையில் தாசில்தாராக இருந்து கொண்டே, நாதக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட செல்வகுமார், பணியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அரசு சம்பளம் வாங்கிக் கொண்டே, ஒரு கட்சி சார்பில் நடந்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் பெற்ற பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.
Similar News
News March 6, 2026
BREAKING: கவர்னர் RN ரவி மாற்றம்!

தமிழக கவர்னராக இருந்த RN ரவி மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருந்த <<19306734>>ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா<<>> செய்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News March 6, 2026
PhonePe-ல் பயோமெட்ரிக் முறை

UPI பேமெண்ட்க்கு பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை PIN மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், இனி Fingerprint அல்லது Face recognition வைத்து பேமெண்ட் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் முறை ₹5000 வரை பரிவர்த்தனைக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் PhonePe செயலி இருந்தால் உள்ளே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி பாருங்க.
News March 6, 2026
சஞ்சு சாதனை… ஆர்ச்சர் வேதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம் டி20 WC வரலாற்றில் அதிக சிக்சர்கள்(16) அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேசமயம், டி20 WC நாக் அவுட் போட்டியில் 50+ ரன்களை வாரி வழங்கிய பவுலர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் ஆர்ச்சர் (61 ரன்கள்) படைத்துள்ளார்.


