News November 15, 2024
IPL மெகா ஏலத்தில் 574 வீரர்கள்

IPL போட்டியில் விளையாடவுள்ள அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் வருகிற 24, 25ஆம் தேதிகளில் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்து கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி, விடுவித்த வீரர்கள் மற்றும் புதிதாக வந்த வீரர்களையும் சேர்த்து, 366 இந்திய வீரர்கள், 208 வெளிநாட்டு வீரர்கள் கொண்ட இறுதி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
விஜய்- த்ரிஷா.. மோசமாக விமர்சித்த நடிகை!

திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக வந்ததை நடிகை சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார். ‘இது சரியானது இல்லை. மனைவியின் துயரத்தை புறக்கணிக்க முடியாது, கூடாது; நீண்ட கால ரசிகையாக இந்த நேரத்தில் தான் மிகவும் ஏமாற்றமடைவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக, விஜய் மீது பல விஷயங்களில் விமர்சனங்கள் எழுந்தபோது அவருக்கு சனம் ஷெட்டி அவருக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 6, 2026
பெண்களின் Safety-க்காக போனில் இருக்கும் 2 ட்ரிக்ஸ்!

✱Setting-ல் ‘Emergency SOS’ ஆப்ஷனை ஆன் செய்யுங்க. உறவினர் or நண்பரின் Contact-டை Save பண்ணுங்க. போனின் பவர் பட்டனை 3 முறை அழுத்தினால், உங்க Live location போலீஸ் கன்ட்ரோல் ரூம் & Emergency Contact-க்கு மெசேஜ் சென்றுவிடும் ✱India 112 ஆப்- எந்த ஆபத்தாக இருந்தாலும் சரி, இந்த ஆப்பில் ஒரு கிளிக் செய்தால் போதும், 5- 10 நிமிடங்களில் போலீஸ் உதவ வந்துவிடும். இந்த பதிவை அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 6, 2026
BREAKING: விலை ஒரேநாளில் அதிரடியாக குறைந்தது

தக்காளி, வெங்காயம் விலை ஒரேநாளில் அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹6 – ₹8 வரையிலும், பெரிய வெங்காயம் 1 கிலோ ₹12 – ₹15 வரையில் விற்பனையாகிறது. இதனால் சில்லறை கடைகளில் தக்காளி ₹10 வரையிலும், வெங்காயம் ₹15 – ₹18 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


