News November 15, 2024
அரைசதம் கடந்தார் சஞ்சு சாம்சன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது T20 போட்டியில் அதிரடியாக ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்துள்ளார். மொத்தம் 28 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 50 ரன்னை பதிவு செய்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆன அவர், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறார். தற்போது வரை இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 129/1 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News March 18, 2026
புதுக்கோட்டை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 18, 2026
தேமுதிகவுக்கு 7 சீட் ஒதுக்கீடு?

வரும் 23-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பிரேமலதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசார உத்திகள் & தேமுதிகவின் தேர்தல் அறிக்கை குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரிரு நாள்களில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
News March 18, 2026
₹500 நோட்டுகள்.. புதிய உத்தரவு வெளியானது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மூலம் ECI பணிகளைத் தொடங்கியுள்ளது. அனைத்து வங்கிக் கிளைகளிலும் ₹5 லட்சத்துக்கு மேல் ₹500 கட்டுகள் வழங்கக்கூடாது என RBI வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம். அதேநேரம், ₹200, ₹100 நோட்டுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.


