News November 15, 2024
கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தகவல் மையம் 24.01.2025 வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999 0 1800 425 1757 ஆகியவற்றில் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
கொடி கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் வரும் 14-ஆம் தேதிக்குள் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொடிக்கம்பங்களை கட்சிகள் அகற்ற தவறினால் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுவார்கள். அகற்றுவதற்கான செலவுத்தொகை கட்சிகளிடம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News September 10, 2025
வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்டை நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
News September 10, 2025
சென்னையில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. சென்னையில் இன்று மதியம் இரண்டு மணி வரையிலுமே வெயில் உச்சத்தில் இருந்த நிலையில்,அதன் பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கியாது. சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் பெய்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. உங்க ஏரியால மழையா?.