News November 15, 2024
மதுரை – கான்பூர் ரயில் தாமதமாக புறப்படும்

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று (நவ.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை – கான்பூர் சென்ட்ரல் (01928) அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக நாளை (நவ.16) மதியம் 2 மணிக்கு அதாவது 14 மணி 25 நிமிடம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2026
மதுரை: பூட்டிய வீட்டில் சடலம் மீட்பு.!

அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி பெருமாள். இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 12, 2026
மதுரை: சித்திரைத் திருவிழா அட்டவணை வெளியீடு

மதுரை மாநகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையை திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 18 ம் தேதி வாஸ்து சாந்தி தொடங்கப்பட்டு, 30 ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி நடைபெறும் வரை அனைத்து நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 ம் தேதி கள்ளழகர் வைகை எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
மதுரை: தகாத உறவால் பறிபோன குழந்தையின் உயிர்..!

மதுரை ஊமச்சிகுளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, செந்தில் நகர் கண்ணனேந்தல் பகுதியில் வசிக்கும் பாண்டித்துரையின் ஒன்றரை வயது பெண் குழந்தை சுபாஷினி. இக்குழந்தையின் தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், தாயும் கள்ள காதலனும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குளத்தில் தூக்கி வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


