News November 15, 2024

டெல்லியில் பதுங்கியிருக்கும் கஸ்தூரி?

image

TN போலீசாரால் தேடப்படும் கஸ்தூரி, டெல்லியில் பாஜக பிரமுகர் இல்லத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்ஜாமின் காேரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸ் தேடி வருகிறது.

Similar News

News March 22, 2026

விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்குமா?

image

போர் காரணமாக ஏப்ரல் 1 முதல் விமான டிக்கெட் கட்டணங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் (ATF) விலைகளும் உயர வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் டிக்கெட் கட்டணங்களில் ஏற்படலாம் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் சமீபத்தில் கூறினார். இதற்கிடையில், சில விமான நிறுவனங்கள் ஏற்கெனவே கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன.

News March 22, 2026

10 மாதம் தொடர்ந்து பறக்கும் பறவை

image

Common Swift என்ற பறவை தரையிறங்காமல் தொடர்ந்து 10 மாதங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு வலசை போகும் இந்தப் பறவைகள், இடையில் எங்கும் நிற்பதில்லை. 40 கிராம் எடை மட்டுமே கொண்ட இந்த பறவையின் இறக்கைகள் அதிக ஆற்றலைச் செலவழிக்காமல் நீண்ட நேரம் காற்றில் மிதக்க உதவுகின்றன. இனப்பெருக்க காலத்தில் மட்டுமே தரையிறங்குகின்றன.

News March 22, 2026

ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம்

image

இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவ தளமான டியாகோ கார்சியா மீதான ஈரான் தாக்குதலை பிரிட்டன் கண்டித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காக, தங்களின் டியாகோ கார்சியா தளத்தை அமெரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரிட்டன் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈரானில் இருந்து சுமார் 4000 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டன் தளத்தை ஈரான் தாக்கியுள்ளது.

error: Content is protected !!