News November 15, 2024
500 கிலோ காய்கறி அலங்காரத்தில் காட்சியளித்த முத்தாலம்மன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் தெய்வமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு இன்று அண்ணா அபிஷேக விழாவை முன்னிட்டு 500 கிலோ எடை கொண்ட காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்பு அம்மனுக்கு மகா தீபாரதனை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் காய்கறி அலங்காரத்தில் வீற்றிருந்த முத்தாலம்மனை வழங்கி சென்றனர்.
Similar News
News March 7, 2026
இராம்நாடு: புதிய அதிமுக பெண் மாநில நிர்வாகிக்கு வாழ்த்து

அதிமுக மாநில மகளிரணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லீமா ரோஸ் மார்ட்டினை அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாநில அம்மா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில இணைச்செயலாளர் நாகேந்திர சேதுபதி, பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News March 7, 2026
இராம்நாடு: கர்ப்பிணி & கணவருக்கு நேர்ந்த கொடுமை

திருவாடனை அருகே மங்கலக்குடி பேராமங்கலம் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த தஞ்சாவூரை சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில், ரூ.1 லட்சம் முன்பணம் பெற்று 8 மாதங்களாக குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வைத்ததும், ஊருக்கு செல்ல அனுமதிக்காததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் தம்பதியை மீட்டனர்.
News March 7, 2026
இராமேஸ்வரத்தில் தவெகவினர் பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகர் 21-வது வார்டு கரையூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு விசில் சின்னம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


