News November 15, 2024

ராகுலை அடுத்து கோலிக்கும்.. IND-க்கு சிக்கல்..!

image

ஆஸி.,யில் பயிற்சியின்போது கோலிக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. காயம் காரணமாக அவர் ஸ்கேன் எடுத்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த இடத்தில் காயம் என்ற தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, இன்றைய பயிற்சியின்போது கே.எல்.ராகுலுக்கும் காயம் ஏற்பட்டது. டெஸ்ட் தொடர் நெருங்கி வரும் சூழலில், இரண்டு முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பது, இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 11, 2026

நடிகை த்ரிஷாவின் புதிய POST

image

குந்தவை காஸ்ட்யூமை நாய் அணிந்திருக்கும் போட்டோவை த்ரிஷா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். வேறொருவரின் பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ள அவர், அந்த போட்டோவிற்கு ஹார்ட்டின் எமோஜியை வைத்துள்ளார். தன்னை விமர்சித்த பார்த்திபனுக்கு பதிலடியாக இந்த போட்டோவை த்ரிஷா வெளியிட்டுள்ளார் என்றே நெட்டிசன்கள் SM-ல் பேசத் தொடங்கி விட்டனர்.

News March 11, 2026

சிலிண்டர் சிக்கல்.. அரசு ஹாஸ்பிடல்களில் புதிய ஏற்பாடு

image

நாடு முழுக்க சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரசு ஹாஸ்பிடல்களுக்கு முக்கிய ஆலோசனைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது. நோயாளிகளுக்கு உணவு வழங்குவது பாதிக்கப்படாமல் இருக்க குறைவான எரிபொருள் தேவைப்படும் உணவுகளை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவல், ரொட்டி, ஓட்ஸ் போன்ற உணவுகள் நோயாளிகளின் ஃபுட் மெனுவில் அதிகம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

BREAKING: கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

image

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், கேஸ் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கேஸ் சிலிண்டர் விநியோகம், பெட்ரோல் இருப்பு குறித்து குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும் என அவர் அறிவித்துள்ளார். அதன்பின், தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமாம்.

error: Content is protected !!