News November 15, 2024

தீபாவளியில் அசைவம்.. UK பிரதமர் அலுவலகம் மன்னிப்பு

image

தீபாவளி விருந்தில் அசைவம், மது பரிமாறியதற்காக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது. கடந்த 29ஆம் தேதி இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் பிரதமர் ஸ்டார்மர் தலைமையிலான நிகழ்ச்சியில் இச்சம்பவம் நடந்தது. இந்திய வம்சாவளி MP ஷிவானி உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், வருங்காலங்களில் இதுபோன்று நடைபெறாது என பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.

Similar News

News August 27, 2025

வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 27)

image

1908 – புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் பிறந்த தினம்
1939 – உலகின் முதல் ஜெட் விமானம் சேவைக்கு தொடங்கியது
1972 – WWE வீரர் கிரேட் காளி பிறந்த தினம்
1979 – இந்தியாவின் தலைமை கவர்னர் மவுண்ட்பேட்டன் பிரபு மறைந்தார்
1991 – மால்டோவா விடுதலை தினம்
2003 – 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வந்தது.

News August 27, 2025

இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு

image

ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பாளரான சுசூகி மோட்டார்ஸ் அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 11 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News August 27, 2025

ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு

image

ராஜஸ்தானில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் இருப்பதால் ஹுண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்கள் மீது ராஜஸ்தானை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். சட்டப்படி பிராண்ட் தூதர்கள் குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களுக்கும் அதில் பொறுப்புள்ளது.

error: Content is protected !!