News November 15, 2024
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட வட்டாட்சியர்

நெல்லை மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியராக பணிபுரிந்த அரசு அதிகாரி ஒருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அரசு அதிகாரியாக இருந்து கொண்டு நாம் தமிழர் கட்சியில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Similar News
News March 10, 2026
நெல்லை: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

நெல்லை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
22,601 பேர் நெல்லை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை 11ம் தேதி புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 96 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 22,601 பேர் இந்த தேர்வு எழுத உள்ளனர். இதில் 11,243 பேர் மாணவிகள் ஆவர் 11,358 பேர் மாணவர்கள் ஆவர் என சிஇஓ சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
நெல்லை – மங்களூர் வழி தடத்தில் புதிய ரயில்

நெல்லை – கர்நாடக மங்களூரு இடையே புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.தொடங்கி வைக்கிறார். வண்டி எண்: 16707 / 16708 நெல்லையிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூரு செல்லும். மறுமார்க்கத்தில், மங்களூருவிலிருந்து வியாழன் மதியம் 1 மணிக்கு புறப்படும்.


