News November 15, 2024
சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்தது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,வழக்கு விசாரணையை டிச.13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News March 2, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு.!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி மதுரை வந்திருந்த நிலையில், அங்கிருந்து காணொளி காட்சி வாயிலாக புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே நிலைய பொறியாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
News March 2, 2026
ராஜபாளையம்: 2 பேர் திடீர் தற்கொலை

ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பைக் திருட்டில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரை இவரது பாட்டி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் நேற்று தற்கொலை செய்துகொண்டார். ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கருப்பையா (44) என்பவர் தீவிர வயிறு வலியால் அவதியுற்று வந்ததாக தெரிகிறது. இதனால் நேற்று மன வேதனையில் கருப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News March 2, 2026
சிவகாசி: கருந்திரி தயாரித்த 7 பேர் மீது வழக்கு

வெம்பக்கோட்டை அருகே பனையடிப்பட்டியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக தகர செட்டில் பட்டாசு கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக தயார் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான கருந்திரிகள், 270 குரோஸ்களையும் பறிமுதல் செய்து கீழக்காந்தி நகரை சேர்ந்த மாரிமுத்துவை(32) கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.


