News November 15, 2024
கங்குவா முதல் நாள் வசூல் இவ்வளவா?

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான ‘கங்குவா’ முதல் நாளில் உலகம் முழுவதும் ₹58.62 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் முதல் நாளில் வசூலை குவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் விடுமுறை என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
Similar News
News March 2, 2026
மகளிருக்கு ₹1000.. ஏன் சிலருக்கு பொத்துட்டு வருது? ரோஜா

CM ஸ்டாலின் மகளிருக்கு ₹5000-ஐ கொடுத்ததால் பலருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என ரோஜா கூறியுள்ளார். அதனால்தான் அதை சிலர் ’பிச்சை காசு, மக்களை சோம்பேறி ஆக்குகிறார் CM’ என விமர்சிப்பதாக கூறிய அவர், ஸ்டாலின் அப்படி செய்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றார். மேலும், மிடில் கிளாஸ் மக்களுக்கு ₹1000 பெரிய விஷயம் எனவும், ஏழைகளுக்கு கொடுத்தால் மட்டும் ஏன் இப்படி பொத்துக்கொண்டு வருகிறது என்றும் கேட்டுள்ளார்.
News March 2, 2026
9 அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்

கடந்த 30 ஆண்டுகளில் எ.வ.வேலு முதல் OPS வரையிலான அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் 21 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். குறிப்பாக, ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு (2021) 9 அதிமுக தலைவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் யார் யார் என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்தை கமெண்ட்டில் கூறிவிட்டு, அரசியல் பேசும் உறவுகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
அதிகார பகிர்வில் உறுதியாக இருக்கிறோம்: திருமா

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை முதன்முதலில் முன்னெடுத்ததே விசிகதான் என திருமாவளவன் கூறியுள்ளார். இன்னும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாக கூறிய அவர், TN அரசியல் அதற்கு இன்னும் கனியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தங்களை பொறுத்தவரை அதிகாரத்தில் பங்கு என்றால் தற்போது அதிக தொகுதிகளை கேட்பதுதான் எனவும், தொகுதி பங்கீடு வலிமைக்கு ஏற்ப அமையவேண்டும் என திமுகவிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.


