News November 15, 2024

புதுவையில் உள்துறை அமைச்சர் ஆலோசனை

image

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு காவல் துறை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தலைமையில் இன்று சட்டமன்றம் அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி டிஜிபி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் செயலர் கேசவன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News March 4, 2026

புதுச்சேரி: கலைஞர்களை ஊக்குவிக்க பிஎம் ஏக்தா மால்

image

புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஷீலா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.128 கோடியில் பி.எம் ஏக்தா மால், 4.7 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.64 கோடி நிதியை ஏற்கனவே விடுவித்துள்ளது. இங்கு பிரத்யேக கண்காட்சி அரங்குகள் மற்றும் கலாச்சார மையங்கள் இடம்பெறும் என உள்ளது.

News March 4, 2026

புதுச்சேரி: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

புதுவை: சாலை விபத்தில் நீதிமன்ற ஊழியரின் மகன் பலி!

image

புதுவை வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டைச் சேர்ந்த நீதிமன்ற ஊழியர் ரேணுகாவின் மகன் ஜெயக்குமார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முருங்கப்பாக்கம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!