News March 21, 2024
அமெரிக்க வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமின்றி தொடர்வதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்திற்கு பின் பேசிய அதன் தலைவர் ஜெரோம் பாவெல், ‘மார்ச் மாதத்திற்கான வட்டி விகிதம் 5.25% -5.5%ஆக மாற்றமின்றி தொடரும்’ என்றார். 5ஆவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால், அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்வு கண்டன.
Similar News
News April 21, 2025
பிஎம் இன்டர்ன்சிப் திட்டம்: நாளையே கடைசி

படித்த வேலையில்லா இளைஞர்களை தேர்வு செய்து, தனியார் நிறுவன பங்களிப்புடன் அவர்களுக்கு மத்திய அரசு ஓராண்டு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கிறது. அப்போது மாதம் தலா ரூ.5,000, ஒரு முறை மட்டும் ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இதற்கு <
News April 21, 2025
REWIND: தமிழ் கவிஞர் பாரதிதாசன் மறைந்த நாள்

தமிழ் இலக்கிய உலகில் மிகவும் போற்றப்படுபவர்களில் பாரதிதாசனும் ஒருவர். பெண்கள் விடுதலை,அழகின் சிரிப்பு, குயில் பாடல்கள் என பாரதிதாசன் படைத்த படைப்புகள் இன்றும் அவர் புகழ் பாடுகின்றன. பாரதியாரின் வழியில் அவரை அடியொற்றித் துடித்தெழுந்து தொண்டாற்றியவர் பாரதிதாசன். அவரின் பெயரையே தனது பெயராகவும் அவர் மாற்றிக் கொண்டார். கடந்த 1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இதே நாளில்தான் அவர் இன்னுயீர் நீத்தார்.
News April 21, 2025
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடி உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில், 4-வது கேள்வியின் இரண்டு வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இந்த கேள்வியை மாணவர் அட்டென்ட் செய்திருந்தால் ஒரு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.