News November 15, 2024
SK பட ஷூட்டிங் நடந்ததால் போக்குவரத்து நெரிசல்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்று சென்னை பெருங்களத்தூர் மேம்பாலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் மேம்பாலத்தில் இருந்து குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
சென்னை: அஷ்டலட்சுமி கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையோரம் அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியையும் பிரார்த்திக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 7, 2026
சென்னையில் சம்பளப் பிரச்னையா?

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <


