News November 15, 2024

எலி மருந்து விவகாரம்: பிஞ்சுகள் பலியானது எப்படி?

image

சென்னை குன்றத்தூரில் வீட்டில் எலி மருந்து வைத்ததால், காற்றில் நெடி பரவி 2 குழந்தைகள் நேற்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில், 3 இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் மருந்து வைத்ததே உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, அளவுக்கு அதிகமாக மருந்து வைத்த பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Similar News

News March 7, 2026

OPS எண்ட்ரியால் திமுகவில் சலசலப்பா?

image

OPS வருகையால் திமுகவின் தென்மாவட்ட நிர்வாகிகள் பலர் முகம் வாடுகின்றனராம். காரணம், அதிமுகவில் இருந்து வருகிறவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தலைமை, ஏற்கெனவே இருக்கும் நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குகிறது என்கின்றனராம். அத்துடன் ஜெ.,வின் ஆதரவாளரான OPS தற்போது திமுக புகழ் பாடத்தொடங்கியிருப்பதால் அவருக்கு இருந்த சமூக ஆதரவும் குறைந்திருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

News March 7, 2026

நகைக்கடன் தள்ளுபடி .. வெளியான மகிழ்ச்சி செய்தி

image

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பெண்களை கவரும் வகையில், மகளிர் தினத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை விஜய் வெளியிடுகிறார். நாளை திமுகவும், அதிமுகவும் பெண்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

News March 7, 2026

திமுக டெபாசிட்டை இழக்கும்: ராஜேந்திர பாலாஜி

image

திமுக தங்களது கூட்டணியில் 50 கட்சிகளை இணைத்தாலும், அனைத்து இடங்களில் டெபாசிட்டை இழக்கும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அண்ணா உருவாக்கிய திமுகவை ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிவிட்டார் என விமர்சித்த அவர், எங்களை எதிர்க்கும் துணிச்சல் திமுக கூட்டணிக்கு கிடையாது என்றார். மேலும், நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது; எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!