News November 15, 2024
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விருது

சென்னையில் நடந்த விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம், கள்ளுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். குடியாத்தம் வட்டார கல்வி அலுவலர்கள் என்.பி.கண்ணன், கே.உஷாராணி, பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா பிரேம்குமாரி ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.
Similar News
News March 13, 2026
வேலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாளை (மார்ச் 14) வேலூர், குடியாத்தம், காட்பாடி ஆகிய நீதிமன்றங்களில் ‘தேசிய மக்கள் நீதிமன்றம்’ நடைபெற உள்ளது. நிலுவையிலுள்ள உரிமையியல், வாகன விபத்து, காசோலை மற்றும் சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகளுக்குத் தீர்வு காணப்படவுள்ளது. வழக்காடிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரச்சனைகளுக்குப் சுமூகமாகத் தீர்வு கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News March 13, 2026
வேலூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, வேலூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9042144504-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 13, 2026
வேலூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.


