News November 15, 2024
Tech Talk: படு ‘வீக்’கான பாஸ்வேர்டு இதுதான்!

உலகில் அதிகமாக பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளில் ‘123456’ என்பது முதலிடத்தில் இருப்பதாக NORDPASS ஆய்வில் தெரியவந்துள்ளது. 44 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நொடிக்குள் பலரின் பாஸ்வேர்டை CRACK செய்ய முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் PASSWORD என்ற வார்த்தையை 30,18,050 பேர் பாஸ்வேர்ட்டாக வைத்துள்ளனர். படு வீக்கான இத்தகைய பாஸ்வேர்டுகளை நீங்கள் வைத்திருந்தால் முதலில் அதனை மாற்றுங்கள்!
Similar News
News August 27, 2025
விஞ்ஞான ரீதியிலான ஊழல்: EPS சாடல்

‘கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041’, TN அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டடது. இந்நிலையில், DMK-வின் குடும்ப & கட்சி உறவுகளுக்கு நெருக்கமானவர்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், குடியிருப்பு மனை நிலமாகவே வகைப்பாட்டிலேயே இருக்கும்வகையில், இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், இது விஞ்ஞான முறையிலான ஊழலுக்கு வித்திடும் வகையில் உள்ளதாகவும் அவர் சாடினார்.
News August 27, 2025
இடுப்பை வலுப்படுத்தும் பத்த கோணாசனம்!

✦மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களை போக்க உதவுகிறது.
➥தரையில் அமர்ந்து, முதுகை நேராக வைத்து, கால்களை நேராக முன்னோக்கி நீட்டி அமரவும்.
➥முழங்கால்களை வளைத்து, பாதங்களை சேர்த்து, உள்ளங்கால்கள் இரண்டும் ஒட்டியிருக்கும் படி பிடித்துக் கொள்ளவும்.
➥கைகளால் முழங்கால்களை மெதுவாக தரை நோக்கி அழுத்தவும்.
➥இந்த நிலையில், 15- 20 விநாடிகள் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News August 27, 2025
அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும்: OPS

தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகளில் சில ஏற்புடையதாக இல்லை என OPS சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மதுரை மாநாட்டில், முதல்வரை ‘ஸ்டாலின் Uncle’ என விஜய் கூறியதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.