News November 15, 2024
ஈரான் தூதருடன் எலான் மஸ்க் ரகசிய சந்திப்பு!

ஐ.நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத்தை, தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தித்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திங்களன்று நியூயார்க்கில் ரகசிய இடத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் இடையே பதற்றத்தை தணிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தை விரும்பாத அமெரிக்கா, அதன் மீது பல ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
Similar News
News March 3, 2026
விழுப்புரம்: வாய்கால் தூர்வாறும் பணியை ஆட்சியர் ஆய்வு!

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் உள்ள வாய்கால் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீபிரியா உட்பட பலர் உள்ளனர்.
News March 3, 2026
திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் திமுக: TTV

சிறப்பு நிதி எனும் திமுகவின் தேர்தல் கால சித்து விளையாட்டுகள் மக்களிடம் எடுபடாது என TTV விமர்சித்துள்ளார். மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தக்கோரி, ஜனநாயக ரீதியில் போராடிய மாற்றுத்திறனாளிகளின் மீது திமுக அரசு காவல்துறையை ஏவி அடக்குமுறை செய்தது. ஆனால் தற்போது தேர்தல் நேரத்தில் திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
News March 3, 2026
CSK-வின் பவுலிங் கோச் அஸ்வினா?

சென்னை அணியில் தனது IPL பயணத்தை தொடங்கிய அஸ்வின் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், CSK நிர்வாகம் அஸ்வினின் போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு, யார் என்று கண்டுபிடியுங்கள் என கேட்டுள்ளது. இதனால் அவர் CSK-வின் பவுலிங் கோச்சாக நியமிக்கப்பட இருக்கலாம் என்ற செய்தி தீ போல் பரவி வருகிறது. முன்னதாக CSK அகடாமியின் முக்கிய பொறுப்பில் அவர் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


