News November 15, 2024
சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா? – டிடிவி ஆவேசம்

மதுரை காட்டுநாயக்கர் சமுதாய மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. சாதி சான்று வழங்க மதுரை மாவட்ட நிர்வாகத்தையும் திமுக அரசையும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 2, 2026
மதுரை: கார் – வேன் மோதல்; ஒருவர் பரிதாப பலி.!

மதுரை சிக்கந்தர் சாவடி பொற்கொடி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று கொடைக்கானலுக்கு சவாரி சென்று விட்டு திரும்பி வருகையில், வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இவர் கார் மீது எதிரே வந்த பால் வேன் நேருக்கு நேராக மோதியது. இதில் ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 2, 2026
மதுரை இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
மதுரை: பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்த மோடி

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தற்கொலை செய்துகொண்ட பக்தர் பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர், குடும்பச் சூழல் குறித்துக் கேட்டறிந்தார்.


