News November 15, 2024
PM மோடியின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

PM மோடி பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு மோடி புறப்பட இருந்தார். இந்நிலையில், அவரின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் தியோகர் விமான நிலையத்தில் அது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News March 2, 2026
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து பாதிப்பா?

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் 10-15 நாள்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாகவும், வரத்து தடைபடாமல் இருக்க USA, மேற்கு அப்ரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மாற்று திட்டங்களை இந்தியா செயல்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
News March 2, 2026
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்!

*இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம் *மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம் *வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக் கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது *எல்லோரும் தம்மை விட்டு வேறு யாரையோ சீர் திருத்த முயல்கிறார்கள் *ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை
News March 2, 2026
ஈரானை திட்டமிட்டே தாக்கினாரா டிரம்ப்?

அணு ஆயுத ஒப்பந்தம் இறுதியாகும் தருணத்தில் USA தங்களது நாட்டை தாக்கிவிட்டதாக ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச உறவுகளை டிரம்ப் அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ஜெனிவா கூட்டத்தில் அணு ஆயுத ஒப்பந்தம் இறுதியாகியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஒப்பந்தத்திற்கு ஈரான் தயாராக இருந்தாலும் டிரம்ப் திட்டமிட்டே தாக்க உத்தரவிட்டதாக ஈரானிய ஊடகங்கள் சாடுகின்றன.


