News November 15, 2024
இன்று 18 மாவட்டங்களில் கனமழை

18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
Similar News
News March 2, 2026
பிரபல தமிழ் நடிகர் அப்பா ஆனார் ❤️❤️

நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சோஷியல் மீடியாவில் அறிக்கை வெளியிட்டுள்ள ஹரிஷ், தனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், நாங்கள் அழகான புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரமாக அறியப்படும் ஹரிஷ் கல்யாண், 2022-ல் நர்மதாவை கரம்பிடித்தார்.
News March 2, 2026
ஈரானுக்கு வளைகுடா நாடுகள் எச்சரிக்கை!

ஈரானின் தொடர் தாக்குதலையடுத்து கத்தார், சவுதி, UAE, பஹ்ரைன், ஓமன், குவைத் ஆகிய 6 நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பின்னர் 6 நாடுகளும் கூட்டாக ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளன. உடனடியாக தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், தற்காத்துக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். ஈரானின் தாக்குதல் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
News March 2, 2026
தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கில் தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் வரும் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை கோர்ட் அறிவித்துள்ளது. கடந்த 2020-ல் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைதான நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வர உள்ளது.


