News November 15, 2024

கே.எல்.ராகுல் காயமடைந்ததால் இந்தியாவிற்கு மேலும் சிக்கல்

image

BGT தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், கே.எல்.ராகுல் Practice ஆட்டத்தின் போது, காயத்தில் சிக்கியுள்ளார். இந்திய அணியின் இன்றைய பயிற்சி ஆட்டத்தின் போது அவரது வலது முழங்கையில் பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டது. முதல் டெஸ்டில் ரோஹித்திற்கு பதிலாக ராகுல் களமிறங்குவார் என்றே கருதப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 8, 2026

எல்லை பாதுகாப்பு பணிகளில் ரோபோ

image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எல்லை காவலுக்கான ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்று அம்மாநில CM தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்துள்ளார். -40°C வரையிலான கடும் குளிரிலும் இந்திய எல்லைகளை காவல் காக்கும் ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்றும், சீனாவுக்கு இணையாக இந்தியாவிலும் ரோபோக்களை உருவாக்குவோம் என்றும் கூறினார். மேலும், அடுத்த ஆண்டில் முதல் ரோபோ முன்மாதிரி உருவாக்கப்படும் என்றார்.

News March 8, 2026

நிதிஷ்குமாரின் பதவி பறிக்கப்பட்டதா? வானதி

image

நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் வைத்த விமர்சனத்துக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். ராஜ்யசபாவுக்கு செல்ல வேண்டும் என்பது நிதிஷின் சொந்த முடிவு என்றும், பிஹாரில் பாஜக அதிக MLA-க்கள் பெற்றும் 2 முறை அவரை முதல்வராக்கினோம் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக வந்துவிடும் என மக்களை ஸ்டாலின் பயமுறுத்த பார்க்கிறார், ஆனால் ஏற்கனெவே இங்கு பாஜக வந்துவிட்டது என கூறியுள்ளார்.

News March 8, 2026

ராசி பலன்கள் (08.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!