News November 15, 2024
பத்துகாணியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: வன அதிகாரி

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இன்று கூறுகையில், பத்துகாணி பகுதியில் சிறுத்தைகள் நடமாடியதாக கூறப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதில் சிறுத்தைகள் நடமாட்டம் எதுவும் பதிவாகவில்லை. அங்கு பெரிய காட்டுப் பூனைகள் நடமாடி வருகின்றன. கடந்த 6,7 மாதங்களுக்கு முன்பு இது போன்று காட்டு பூனைகள் அந்த பகுதியில் நடமாடியுள்ளன என்றார்.
Similar News
News March 1, 2026
குமரி : டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.
News March 1, 2026
குமரி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News March 1, 2026
குமரி: வட்டார காங்கிரஸ் தலைவர் மீது பாய்ந்த வழக்கு

குமரி மாவட்டத்தில் குழித்துறை ஆற்றுப்பாலம் முதல் திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டுகளும், கொடிகளும் வைத்திருந்ததாக மேற்கு மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் ரவி(50) மீது களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளார். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அவை வைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


