News November 15, 2024

திருப்பூர்: லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

image

பல்லடத்தை சேர்ந்தவர் செல்வமணி (46). பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரம் செய்து வந்தார். பல்லடம் வணிகவரித்துறை அலுவலகத்தில், கடந்த 2010ல், செல்வமணி புதிய ஜி.எஸ்.டி எண் வாங்க விண்ணப்பித்தார். வணிகவரி உதவி அதிகாரி சேமகுமார் (55), லஞ்சம் கேட்டதாக புகாரளிக்கப்பட்டது. இவ்வழக்கில் திருப்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் 3 ஆண்டு சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி செல்லதுரை தீர்ப்பு வழங்கினார்.

Similar News

News March 14, 2026

தாராபுரத்தில் வசமாக சிக்கிய 3 பேர்: அதிரடி கைது!

image

தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் அமராவதி ஆற்றுப்பாலம் ஈஸ்வரன் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

News March 13, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார் 13) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News March 13, 2026

திருப்பூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!