News November 15, 2024
வாக்காளர் அட்டையில் திருத்தம்..நாளை சிறப்பு முகாம்

வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், முகவரி, தொகுதி, பாகம் உள்ளிட்டவற்றை திருத்த தேர்தல் ஆணையம் (EC) சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாளை, நாளை மறுநாள் மற்றும் வரும் 23, 24ஆம் தேதிகளில் உங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடியில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாமுக்கு சென்று புகைப்படம், முகவரி சான்று நகல் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பித்தால் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். SHARE IT.
Similar News
News August 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 27, ஆவணி 11 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News August 27, 2025
சோஷியல் மீடியாவுக்கு கட்டுப்பாடு தேவை: SC

சோஷியல் மீடியாவில்(SM) வெளியிடப்படும் பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு SC அறிவுறுத்தியுள்ளது. SM-ல் பதிவுகள் வணிகமயமாகியதால், மாற்றுதிறனாளிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்படுவதாக கோர்ட் கவலையும் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக 5 யூடியூபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
News August 27, 2025
அமெரிக்காவால் பாதிக்கப்படும் துறைகளுக்கு சலுகை

அமெரிக்க வரிவிதிப்பால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஜவுளி, ஃபர்னிச்சர், வேளாண் பொருள்கள், லெதர் உள்பட பல்வேறு துறையினருக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.