News November 15, 2024
திண்டுக்கல்: தொடர் திருட்டு சிக்கிய திருடன்

ரெட்டியார்சத்திரம் பகுதியில் தொடர்ச்சியாக இரவில் வீட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரெட்டியார்சத்திர காவல்துறை கொண்ட தனிப்படையினர், சிசிடிவி காவலர்கள் மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் தீவிரமாக விசாரித்து சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை, மேலூர் சேர்ந்த பெரியசாமி (எ) பொட்டுக்கடலை (25) என்பவரை கைது செய்து கத்தி கையுறை ஆகியவற்றில் பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 3, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனுமதியில்லாத லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வகை செயலிகள் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளை அணுகி பாதுகாப்பாக கடன் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 3, 2026
திண்டுக்கல்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News March 3, 2026
திண்டுக்கல்: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

திண்டுக்கல் மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.


