News November 15, 2024
திருப்பூர் மாவட்டத்தில் 81.80 மி.மீ மழை பதிவு

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் குமரன் ரோடு 6 மி.மீ, கலெக்டர் அலுவலக பகுதியில் 3 மி.மீ, ஊத்துக்குளியில் 10.80 மி.மீ, மூலனுரில் 19 மி.மீ, நல்லதங்காள் ஓடை பகுதியில் 12 மி.மீ, காங்கேயம் பகுதியில் 5 மி.மீ, வெள்ளகோவிலில் 6 மி.மீ என மாவட்டம் முழுவதும் 81.மி.மீ மழை பதிவானது.
Similar News
News March 5, 2026
திருப்பூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News March 5, 2026
திருப்பூர் வருகை தரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை 07.03.2026 அன்று நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
News March 5, 2026
உடுமலையில் சத்யராஜ் மகள் போட்டியா?

2026 சட்டமன்றத் தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் விருப்பமனு அளித்துள்ளார். உடுமலைப் பகுதியோடு குடும்ப ரீதியான நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், தற்போது தீவிர அரசியலில் இறங்கியிருப்பது அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


