News November 15, 2024

இலங்கை பயணிகள் கப்பல் ஒரு மாதம் நிறுத்தம்

image

நாகை – காங்கேசன்துறை இடையே ஆன சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 18 வரை நிறுத்தப்படுகிறது. ஆனாலும் நாகை – காங்கேசன்துறை இரு பகுதிகளில் இருந்தும் பயணிகள் வசதி கருதி 15, 16 ,17 மற்றும் 18 ந்தேதி வரை கப்பல் இயக்கப்பட்டு அதன் பின்னர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

நாகையில் வேளாண்மை கண்காட்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

image

நாகை, வெளிப்பாளையம் GVR திருமண மண்டபத்தில் வருகிற மார். 6ஆம் தேதி உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, அங்கக சான்று துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, வேளாண் அறிவியல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அரங்குகள் அமைக்கின்றன.
எனவே விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் பாபு அழைப்பு விடுத்துள்ளார்.

News March 5, 2026

தவறி விழுந்த பெயிண்டர் பரிதாப பலி

image

வேதாரணியம் அடுத்த தோப்புத்துறை மலாக்கா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், தோப்புத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஒரு வீட்டில் வேலை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 5, 2026

குடி போதையில் பூச்சி மருந்து குடித்தவர் உயிரிழப்பு

image

காரியாபட்டினம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கத்தரிப்புலம் கோவில் குத்தகை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் மரப்பட்டை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆனந்தராஜ் போதையில் வீட்டிற்கு வந்து சாப்பாடு சரியில்லை என கூறி தகராறு செய்துவிட்டு. வீட்டை விட்டு சென்றுள்ளார். அப்போது தனது மர பட்டறையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!