News November 15, 2024

குற்றவாளிகள் தண்டனையை ரத்து செய்ததை ஏற்க முடியாத: SC

image

குமரியை சேர்ந்தவரான, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்த சரவண சுப்பையா நிலத்தகராறில் 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2021-ல் சென்னை கோர்ட் 7 பேருக்கு மரண, 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்க, மேல் முறையீட்டில் 9 பேரும் விடுதலையாயினர். இதை எதிர்த்து டாக்டர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டினை அணுக, தண்டனையை முழுமையாக ரத்து செய்ததை ஏற்கமுடியாது என நேற்று கோர்ட் கூறியுள்ளது.

Similar News

News March 3, 2026

குமரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News March 3, 2026

குமரி: பாஜக கவுன்சிலர் உட்பட 12 பேர் மீது வழக்கு

image

நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை தொங்கவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஐரின் சேகர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் மாநகர பாஜக கவுன்சிலர் சுனில் மற்றும் ராஜா உட்பட 12 பேர் மீது நாகர்கோவில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 3, 2026

நாகர்கோவிலில் பா.ஜ.க.,வினர் மீது வழக்குப் பதிவு

image

நாகர்கோவிலை அடுத்துள்ள தம்மத்துக் கோணம் சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் ராகுல்காந்தியின் உருவ பொம்மை தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக நாகர்கோவில் மேற்கு மாநகரத் தலைவர் சதீஷ் உட்பட சிலர் மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!