News November 15, 2024
தூத்துக்குடி: புதிய வாக்காளர்களுக்கு நாளை வாய்ப்பு!

தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்ய முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(நவ.,16) & நாளை மறுநாள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய வாக்காளர்கள் பதிவு செய்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.
Similar News
News March 4, 2026
தூத்துக்குடி: தாயை கொலை செய்த மகன் – அதிர்ச்சி பிண்ணனி

கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியத்தை சேர்ந்தவர் வேல்சாமி இளநீர் வியாபாரி. இவர் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார் அவர் தர மறுக்கவே அவரை அரிவாள் மற்றும் செங்கலால் தாக்கி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக கயத்தாறு போலீசார் வேல்சாமியை கைது செய்தனர். வேல்சாமி ஏற்கனவே 2003ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 4, 2026
தூத்துக்குடி: கொலை வழக்கில் சிறுவனுக்கு நூதன தண்டனை

விளாத்திகுளம் குருவார்பட்டி சேர்ந்த முருகன் கடந்த 2018-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது தூத்துக்குடி இளம் சிறார் நீதிக் குழும முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் இளம் சிறார் 3 ஆண்டுகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் 8 மணி நேரம் சேவை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
News March 4, 2026
அமைச்சரின் சொத்து குறிப்பு வழக்கு ஓத்திவைப்பு

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கினை மார்ச்.7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


