News November 15, 2024
கல்வி உதவித் தொகைக்கு உடனடியாக பதிவு செய்யவும்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த (BC, MBC/DNC) மாணவ மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக மற்றும் புதுப்பித்தலுக்காக விரும்பும் தகுதியான மாணவர்கள் tngovtitsscholarship@gmail.com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து 15/01/2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
தருமபுரி: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில்<
News March 3, 2026
தருமபுரி ஆட்சியர் உத்தரவு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தலைமையில் நேற்று (02.03.2026) நடைபெற்றது. இந்த மக்கள் குறை கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 606 மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
News March 3, 2026
தருமபுரி: தூக்கில் தொங்கிய மாணவன்

தருமபுரி அருகே உள்ள வி.ஜெட்டி அள்ளி இளங்கோநகர் பகுதியை சேர்ந்தவர் அருள் கணேஷ், தொழிலாளி. இவருடைய மகன் கவுதம்ராவ் (வயது 15). தோக்கம்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த கவுதம்ராவ் திடீரென பாட்டி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.


