News November 15, 2024
சிக்கிய கங்குவா..எஸ்கேப்பான புஷ்பா

கங்குவா படம் கலவையான விமர்சனத்தைப் பெற முக்கிய காரணமாக உள்ளது படத்தின் BGM ஸ்கோர். ஒரு சில இடங்களில் DSP மிரட்டினாலும், பல இடங்களில் BGM இரைச்சலாக, சத்தமாக இருப்பதாகவே இருக்கிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் முன்கூட்டியே விழித்து கொண்டது புஷ்பா படக்குழு எனலாம். புஷ்பாவிற்கு DSP தான் இசை என்றாலும், BGM அமைக்க தமன் கமிட்டாகியுள்ளார் எனச் செய்திகள் வெளிவருகின்றன.
Similar News
News August 27, 2025
இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு

ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பாளரான சுசூகி மோட்டார்ஸ் அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 11 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News August 27, 2025
ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தானில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் இருப்பதால் ஹுண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்கள் மீது ராஜஸ்தானை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். சட்டப்படி பிராண்ட் தூதர்கள் குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களுக்கும் அதில் பொறுப்புள்ளது.
News August 27, 2025
ஜாக் மாவின் பொன்மொழிகள்

✪ கனவுகளின் அழகை நம்புபவர்களுக்குதான் எதிர்காலம் சொந்தம்
✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு
✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியசமானவராக இருக்க வேண்டும்
✪ யோசனை எதுவென்பது முக்கியமல்ல; அது செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம்
✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.