News November 15, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.16.) கள்ளக்குறிச்சி துணை மின் நிலையம், மூங்கில்பாடி துணை மின் நிலையம், எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளன. கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், மூங்கில்பாடி, திம்மாபுரம், மட்டப்பாறை, வெள்ளிமலை, மண்மலை, அரசம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

Similar News

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: திக்குமுக்காடும் சைபர் க்ரைம் போலீசார்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வடமாநிலங்களை சேர்ந்த கும்பல்கள், புது புது டெக்னிக்கில் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் பிரிவில் மொத்தமே 5 காவலர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் சைபர் க்ரைம் பிரிவு திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிநவீன வசதிகளுடன் கூடிய சைபர் பிரிவு தேவை என கோரிக்கை எழுந்துள்ளது.

News March 2, 2026

சங்கராபுரத்தில் அதிரடி கைது!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இளங்கோவன் மனைவி அஞ்சலை என்பவர் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!