News November 15, 2024

சைனஸை விரட்டி அடிக்கும் கண்டங்கத்திரி தேநீர்

image

மழை & பனிக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, மூச்சிரைப்பு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் கண்டங்கத்திரி டீயைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, ஏலக்காய் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான கண்டங்கத்திரி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

Similar News

News March 2, 2026

தாக்குதலில் கமேனியின் மனைவி மரணம்

image

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் உயர் தலைவர் கமேனியின் மனைவி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிப்.28-ம் தேதி அன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த கமேனியின் மனைவி மன்சூர் கோஜஸ்தே பாகர்சாதே கோமா நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது. 1964-ம் ஆண்டு தனது 17 வயதில் கமேனியை அவர் திருமணம் செய்துள்ளார்.

News March 2, 2026

LNG உற்பத்தியை நிறுத்திய கத்தார்.. விலை உயர வாய்ப்பு

image

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு(LNG) ஆலையான ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக LNG உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக கத்தார் எரிசக்தி துறை அறிவித்துள்ளது. உலகின் 20% LNG உற்பத்தி கத்தாரிடம் இருப்பதால், அதன் விலை சர்வதேச அளவில் உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

News March 2, 2026

கூட்டணியில் இருந்து விலகினார்.. இபிஎஸ் ஷாக்

image

பாஜக, அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. EPS-ஐ சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி என அக்கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரை தற்காலிக சஸ்பெண்ட் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேவராஜன் அறிவித்துள்ளார். இதனால் EPS மற்றும் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

error: Content is protected !!