News November 15, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகை

image

விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வருகை தர உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு மண்டபம் மற்றும் அணைக்கட்டு ஆகியவற்றை முதல்வர் திறக்க உள்ளதாகவும், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி சிலை திறப்பு விழாவிழும் பங்கேற்பார் என பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 12, 2025

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் செ.குன்னத்தூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களில் கழிவுநீர் தேங்கி, குடிநீருடன் கலந்துள்ளதால் 30க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குன்னத்தூர் கிராம மக்கள் இன்று(ஆக.12) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

News August 12, 2025

விழுப்புரத்தின் இந்த அதிசயம் தெரியுமா?

image

விழுப்புரம் மாவட்டத்தில் பல்லவர்களின் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்கும் குடைவரைக் கோயிலின் வரலாறு தெரியுமா? குடைவரைக் கோயில் என்பது பெரும் பாறையை குடைந்து சென்று அதில் அமைக்கப்படும் கோயில் ஆகும். கோயிலில் அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் இரண்டும் வேறுபட்டு காட்சியளிக்கும். ஒரு முறையேனும் இங்கு சென்று பார்க்கவேண்டும் என உங்கள் நண்பருக்கு இதை ஷேர் செய்து அழைத்து செல்லுங்கள்

News August 12, 2025

அரசு மருத்துவக்கல்லூரியில் எம்எல்ஏ ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா இன்று (ஆக.12) அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை RMO.Dr.ரவிக்குமார், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.

error: Content is protected !!