News November 15, 2024

சத்துணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வயிற்று வலி

image

செங்கம் அடுத்த அம்மா பாளையம் அரசு பள்ளியில், நேற்று வழக்கம் போல் மதிய உணவு மற்றும் முட்டை வழங்கி உள்ளனர். இதை சாப்பிட்ட 6ஆம் வகுப்பு மாணவர்கள் 8 பேர், வயிற்று வலியால் துடித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மேல் பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News August 22, 2025

தி.மலையில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு<<>> கிளிக் செய்து இன்று (ஆகஸ்ட் 22) தி,மலை ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர்!

News August 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏலம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோகப் பொருட்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களும், வந்தவாசி உட்பட 9 வட்டாட்சியர்கள் பயன்படுத்திய பழைய ஜீப்புகளும் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலம் 9.9.2025 அன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

News August 22, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்- ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகின்ற ஆக.29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!