News November 15, 2024
வேலூர் மாவட்டத்திற்கு துணை முதல்வர் வருகை

துணை முதல்வர் உதயநிதி மாவட்டம் வாரியாக சென்று வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி ஆய்வு செய்கிறார். மக்களுடன் முதல்வர் திட்டம் உட்பட பல திட்டங்களின் தகுதி பெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வேலூர் மாவட்டத்திற்கு முதல்முறையாக வருகை தருகிறார்.
Similar News
News March 5, 2026
வேலூர் BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

வேலூர் மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
1). அணைகட்டு – 9489804674
2). குடியாத்தம் – 9865019786
3). கே.வி.குப்பம் – 9629015048
4). கணியம்பாடி – 7402602077
5). காட்பாடி – 9443098995
6). பேர்ணாம்பட்டு – 9442152420
7). வேலூர் – 9345278523
News March 5, 2026
வேலூரில் பம்பரமாக சுழலும் MLA!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. அந்த வகையில், அணைக்கட்டு MLA ஏ.பி.நந்தகுமார், தனது தொகுதியில் ஆய்வு செய்வது, பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவது, வாக்கு சேகரிப்பு என பம்பரமாக சுழன்று வருகிறார். ஏற்கனவே வேலூரில் விஜய் ஒரு கலக்கு கலக்கிவிட்டு சென்றுள்ள நிலையில், மற்ற கட்சி நிர்வாகிகள் தங்களை காப்பாத்திக்கொள்ள துடிக்கின்றனர்.
News March 5, 2026
வேலூர் கொலை வழக்கு – வாலிபருக்கு ஆயுள் தண்டனை

வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் ஆகாஷ் என்பவரை சத்துவாச்சாரி வ.ஊ.சி நகரை சேர்ந்த ராஜேஷ் (26) என்ற வாலிபர் கொலை செய்தார். இந்த வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் நேற்று (மார்ச்.04) ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


