News November 15, 2024
கள்ளக்குறிச்சியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பிஇ, பி.டெக் பொறியியல் படிப்பு படித்த மாணவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். இன்று (நவ.15) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விழுப்புரம் சரக டிஐஜி அருள்அரசு, இன்று (மார்ச்.2) காவல் நிலையத்திற்கு உட்பட்ட வருகை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு வந்தார். அப்பொழுது ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் உட்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அவர்களிடம், குறைகளை கேட்டு அறிந்து,பொதுமக்களுக்கு சிறப்பாக பணி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
News March 2, 2026
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று மார்ச் 2ம் தேதி அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது.


