News November 15, 2024
கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?

திருவண்ணாமலையில் இன்று (நவ.15) பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்த தகவலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பௌர்ணமி காலை 5.40 மணிக்கு தொடங்கி, மறுநாள் 16ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெறுகிறது. எனவே, இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. பௌர்ணமியையொட்டி, சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Similar News
News August 22, 2025
தி.மலையில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News August 22, 2025
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோகப் பொருட்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களும், வந்தவாசி உட்பட 9 வட்டாட்சியர்கள் பயன்படுத்திய பழைய ஜீப்புகளும் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலம் 9.9.2025 அன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
News August 22, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம்- ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகின்ற ஆக.29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.