News March 20, 2024
மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து

மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளின் கணக்குகளை பராமரிக்க வரும் 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான அரசின் நிதி விவரங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
பிடிஆர்-க்கே இந்த நிலையா? அவரே சொன்ன பதில்

கடலூரில் டைட்டல் பார்க் அமைக்க அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், பேரவையில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதியை அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும் எனத் தெரிவித்தார். பிடிஆர் நிதியமைச்சராக இருந்தபோது, சரியாக நிதி ஒதுக்கவில்லை என பலர் புலம்பினர். தற்போது PTR-க்கும் அதே நிலை வந்திருக்கிறது.
News April 21, 2025
பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள இரு தமிழர்கள்…

நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ‘C’ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ₹1 கோடி சம்பளமாக வழங்கப்படும். வேறு எந்த தமிழக வீரரை ஒப்பந்தத்தில் சேர்ந்திருக்கலாம்னு நீங்க சொல்லுங்க…
News April 21, 2025
அமைச்சர் கே.என்.நேரு பொய் சொல்கிறார்: இபிஎஸ்

திருச்சி உறையூர் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு தவறான தகவலை அளித்ததாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். வெக்காளியம்மன் கோயில் திருவிழாவில் கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதால் தான் மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார். திருவிழாவில் உறையூர் மக்கள் மட்டுமே பங்கேற்றார்களா? அப்படியெனில் மற்ற பகுதி மக்களுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவில்லை என கேள்வி எழுப்பினார்.