News November 15, 2024

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை 1 மாதம் நிறுத்தம்

image

நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை, அடுத்த ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக INDSRI FERRY SERVICES PVT LTD வெளியிட்டுள்ள அறிவிப்பில், வானிலை காரணமாக நவ.19 – டிச.18 வரை, பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாகை – காங்கேசன்துறை இடையே நவ.15-18ஆம் தேதி வரை, கப்பல் சேவை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 16, 2025

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்? PIB FACTCHECK

image

அனைத்து பெண்களுக்கும் இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், அதற்கு உடனே விண்ணப்பிக்கலாம் எனவும் ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அது உண்மையல்ல என்று மத்திய அரசின் PIBFactCheck மறுத்துள்ளது. ‘இலவச ஸ்கூட்டி திட்டம்’ என்று எந்த திட்டமும் இல்லை. அரசு உறுதிப்படுத்தாத எந்த தகவலையும் நம்பாதீர், யாருக்கும் ஷேர் செய்யவும் வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News August 16, 2025

SIR சர்ச்சை: வாய் திறக்கும் தேர்தல் ஆணையம்..

image

பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம்(EC) வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, பிஹாரில் இருந்து நாளை (ஆக., 17) வாக்காளர்களின் அதிகாரப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கவிருக்கிறார். இந்நிலையில், அதே நாளில் (ஆக., 17) பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 16, 2025

TN பற்றிய இந்த தகவல்கள் 99% இந்தியர்களுக்கு தெரியாது..

image

▶இந்தியாவில் உடலுறுப்பு தானத்தில் TN முதலிடம்.
▶அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக இருக்கிறது TN.▶அதிக தொழிற்சாலைகள் இருக்கும் இடம் TN(39,000+)▶இந்தியாவுக்கான 80% பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகின்றன.▶இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்(ஸ்பெஸர் பிளாசா), முதல் உயிரியல் பூங்கா(அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா) முதல் பெரிய அணுமின் நிலையம் (கூடன்குளம்) TN-ல் உருவாக்கப்பட்டது.

error: Content is protected !!