News November 15, 2024

நடப்பாண்டில் வேகமெடுக்கும் பட்டாசு உற்பத்தி

image

வரும் தீபாவளி பண்டிகைக்காண பட்டாசு உற்பத்தி பணி துவங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி வழக்கத்தைவிட குறைவு என்பதால் தீபாவளி விற்பனையில் பட்டாசுக்கான கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் கடைசி நேர விற்பனை பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற நிலையை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தியை முன்னதாகவே துவக்கியுள்ள உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.

Similar News

News March 10, 2026

BREAKING விருதுநகரில் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

image

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தினசரி 700 வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் நிலையில் 2 நாட்களாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகிறது.

News March 10, 2026

விருதுநகர்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

image

விருதுநகர் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

News March 10, 2026

விருதுநகர்: பீரோவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

image

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (37). இவர் சில மாதங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்க்கையில் இவரது வீட்டில் இருந்த 40 பவுன் நகையை மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருடியது தெரியவந்தது. இது குறித்த புகாரில் மதுரையை சேர்ந்த சகாயலூர்துராசு (28), ஜராவதநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கர் (28) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகைகளை மீட்டனர்.

error: Content is protected !!