News November 15, 2024
வாழ்வாதார பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையில் பதிவு செய்துள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மாவட்ட திறன்வளர்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் வாழ்வாதார பயிற்சிகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பயிற்சி நிறைவடைந்ததற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News March 4, 2026
செங்கல்பட்டில் சாகும் வரை சிறை

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிலிப்ராஜ் (30). இவர் சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் மேஸ்திரியிடம் வேலை செய்து கொண்டு அங்கேயே மற்ற தொழி லாளிகளுடன் தங்கி இருந்துள்ளார். 1.1.2011 அன்று சக தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். இந்த வழக்கில் பிலிப்ராஜ்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
News March 4, 2026
செங்கல்பட்டு நகரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டு நகரில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக அருகிலுள்ள காவல் அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், இன்றைய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
News March 3, 2026
செங்கை: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <


