News November 15, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News March 10, 2026
ஹர்திக் காதலியால் பாண்ட்யா சகோதரர்களுக்குள் மோதலா?

ஹர்திக் பாண்ட்யா விவாகரத்து பெற்ற பிறகும், அவரது Ex. மனைவி நடாஷா & மகன் அகஸ்தியாவுடன் க்ருணால் பாண்ட்யா குடும்பம் நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஹர்திக் மஹிகாவை காதலிப்பது அவர்களை அதிருப்தியடைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதன் காரணமாகவே, T20 WC-யை வென்ற ஹர்திக் பாண்ட்யாவுக்கு இதுவரை க்ருணால் பாண்ட்யா வாழ்த்து பதிவு எதையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழக அரசு ஆலோசனை

USA – இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக தமிழகத்தில் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், INDIAN OIL, HP, BP உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சிலிண்டர் விநியோகம், இருப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
News March 10, 2026
திமுகவின் டூல் கிட் தான் விஜய்: அர்ஜுன் சம்பத்

விஜய்யை NDA-வில் சேரும்படி பவன் கல்யாண் அறிவுறுத்தியதாக பரவும் தகவலை, வதந்தி என அர்ஜுன் சம்பத் மறுத்துள்ளார். விஜய்யின் தவெக தமிழக கலாசாரத்தை சீரழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். விஜய் நடந்து போகும் பாதையை, ஒரு இளம்பெண் முத்தமிட்டதாக குறிப்பிட்ட அவர், இது தான் தமிழக கலாசாரமா என கேள்வி எழுப்பினார். மேலும், விஜய்யை திமுகவின் டூல் கிட் என்றும் சாடினார்.


