News November 15, 2024
அமெரிக்க தேர்தல் எதிரொலி: எக்ஸ்’ஸை கைவிட்ட 1,15,000 பேர்

அமெரிக்க தேர்தலை அடுத்து, எக்ஸ் தளத்தில் இருந்து சுமார் 1,15,000 பயனாளர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் எலன் மாஸ்க், தனது ஆதரவை டிரம்பிற்கு அளித்திருந்தார். எக்ஸ் தளத்திற்கு போட்டியாக Bluesky என்ற தளம் ஒரே வாரத்தில் 10 லட்சம் பயனாளர்களை பெற்றுள்ளது. இத்துடன், பிரபல பிரிட்டன் செய்தி நிறுவனமான The Guardian இனி எக்ஸ் தளத்தில் செயல்படமாட்டோம் என அறிவித்துள்ளது.
Similar News
News March 3, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $20 (இந்திய மதிப்பில் ₹1,831) குறைந்து $5,352.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $5 குறைந்து $90.36-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 3, 2026
World Dosa day: தோசை உருவான வரலாறு தெரியுமா..?

வாரத்தில் 7 நாள் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் ஆள்கள்தான் அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7-ம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை கமெண்ட் பண்ணுங்க!
News March 3, 2026
இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள்!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, 10 சிறப்பு விமானங்களை INDIGO இயக்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, டெல்லி வந்தடையும். வளைகுடா நாடுகளை வான்வழியாக ஈரான் தாக்குவதால் அங்குள்ள இந்திய தூதரகங்களிடம் களநிலவரத்தை கேட்டறிந்து, உரிய அனுமதி பெற்ற பிறகே இந்த விமானங்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


