News November 15, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

தேனி மாவட்டத்தில் இன்று (14.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
வீரபாண்டி திருவிழா ஏலத்தில் முறைகேடு? பாஜக புகார் மனு

வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 21- ந்தேதி கொடியேற்றப்படுகிறது. இதில் பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்க 27-ந்தேதி நடைபெற்ற ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் செயல் அலுவலரிடம் பாஜக மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மனு கொடுத்தனர். அதில், ஏலத்தில் முறைகேடு நடப்பதாகவும், 1 கோடிக்கும் குறைவாக ஏல தொகையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
News March 10, 2026
தேனியில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சாரம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேரூர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News March 10, 2026
தேனியில் மூதாட்டி உடல் கருகி பலி

தேனி வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் நாகரத்தினம் (72). இவர் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் தினந்தோறும் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். 2 தினங்களுக்கு முன்பு விளக்கேற்றிய பொழுது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. இதில் படுகாயம் அடைந்த நாகரத்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (மார்.9) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


